
சொட்ட சொட்ட ரத்தம் ..!! ஒரு நாள் இரவு, நானும் என் அம்மாவும் விருந்தினரோடு பேசிக்கொண்டு இருந்தோம். எங்கள் வீட்டுக்கு இரண்டு வாசல் .. நான் முன் வாசலை பார்த்தபடி அமர்ந்திருக்க, வந்திருந்த விருந்தாளி பின் வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில் அந்த உறவினர் முகத்தில் திடீர் அச்சம்..!! எந்த வித சத்தமும் இல்லாது உள்ளே நுழைய முற்பட்ட அந்த நபரை பார்த்து அதிர்ச்சியுற்றார் எங்கள் விருந்தினர். அந்த நபர் இந்த வீட்டுக்கு புதியவர் இல்லை, வந்திருந்த விருந்தாளிக்கு புதியவர். திருட்டு எண்ணத்தோடு வந்தவரை பார்த்து அலறிவிட்டார் விருந்தாளி. பதட்டத்தை புரிந்துகொண்ட நான் புறவாசல் கதவை அடைத்து வேகமாக ஓடி ஏன் தந்தையை அழைத்து வர. இருவரும் கையில் பொருளோடு சண்டைக்கு தயார் ஆனோம். தப்பிக்கும் வழிகள் அடைக்கப்பட்டன. அந்த முற்றத்தில் நான், ஏன் தந்தை, அந்த நபர் மட்டுமே. காத்திருந்தோம் வெளியே வர இருந்த ஒரே வழியில் காத்திருந்தோம். அந்த நபர் சற்று எட்டி பார்த்து யாரும் இல்லை என்பதை அருந்து வெளியே வர, நடுமண்டையில் படேல் என்று விழுந்தது முதல் அடி. இந...