Posts

Showing posts from March, 2017

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை                                                           மரங்களை பாடுவேன் வாரும் வள்ளுவரே மக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர், மரம் என்று மரமென்றால் அவ்வளவு மட்டமா.!! வணக்கம் ஒளவையே நீட்டோலை வாசியான் யாரென்றீர் மரமென்று மரமென்றால் அத்தனை  இழிவா !! பக்கத்தில் யாரவர் பாரதிதானே பாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர் நெத்தை மரங்கள் என்றீர் மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !! மரம் !!!!!! சிருஷ்டியில் ஒரு  சித்திரம் பூமியின் ஆச்சரிய குறி நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம். விண்மீனுக்குத்  தூண்டில் போடும் கிளைகள் சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள் உயிர் ஒழுகும் மலர்கள் மனிதன்தரா ஞானம் மரம்  தருமெனக்கு மனிதன்  தோன்றும் முன் மரம் தோன்றிற்று மரம் நமக்கு அண்ணன் அண்ணனை பழிக்காதீர். மனித ஆயுல் குமிழிக்குள் கட்டிய கூடாரம் மரம் அப்படியா வளரும் உயிர்களில் ஆயுல் அதிகம் கொண்டது அதுவெய்தான், மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப்புள்ளி மரம் இருக்கும் வரை பூ பூக்கும், இறக்கும் வரை காய் காய்க்கும். வெட்டி நட்டால் க