வைரமுத்து- மரங்களை பாடுவேன்

கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை



                                                          மரங்களை பாடுவேன்


வாரும் வள்ளுவரே
மக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர்,
மரம் என்று

மரமென்றால் அவ்வளவு மட்டமா.!!


வணக்கம் ஒளவையே
நீட்டோலை வாசியான் யாரென்றீர்
மரமென்று

மரமென்றால் அத்தனை  இழிவா !!

பக்கத்தில் யாரவர் பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்
நெத்தை மரங்கள் என்றீர்

மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !!

மரம் !!!!!!
சிருஷ்டியில் ஒரு  சித்திரம்
பூமியின் ஆச்சரிய குறி
நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்.

விண்மீனுக்குத்  தூண்டில் போடும் கிளைகள்
சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள்
உயிர் ஒழுகும் மலர்கள்

மனிதன்தரா ஞானம் மரம்  தருமெனக்கு
மனிதன்  தோன்றும் முன் மரம் தோன்றிற்று
மரம் நமக்கு அண்ணன்
அண்ணனை பழிக்காதீர்.

மனித ஆயுல்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்
மரம் அப்படியா

வளரும் உயிர்களில்
ஆயுல் அதிகம் கொண்டது அதுவெய்தான்,
மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால் முற்றுப்புள்ளி
மரம்
இருக்கும் வரை பூ பூக்கும்,
இறக்கும் வரை காய் காய்க்கும்.

வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே,
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா.

மரத்தை அறுத்தால்,
ஆண்டு வளையம் வயது சொல்லும்.
மனிதனை அறுத்தால்,
உயிரின் செலவைதான் உறுப்பு சொல்லும்.

மரத்திற்கும் வழுக்கை விழும்,
மறுபடி முளைக்கும். நமக்கோ,
உயிர் பிரிந்தாலும்,மயிர் உதிர்ந்தால்
ஒன்றெண்டரிக.

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கு போய்ச் சலவை செய்வது.
மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கு போய் மனுச்செய்வது.
மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள் ஏதப்பா ஏரி.

பறவைக்கும் விலங்கிற்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர் நாம் தருவோமா.

மனிதனின் முதல் நண்பன், மரம்.
மரத்தின் முதல் எதிரி, மனிதன்.
ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்கள் மீதுதான்.


உண்ணக் கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து.
அடையக் குடில்
அடைக்க கதவு,
அழகு வேலி
ஆடாத் தூழி,
தடவத் தைலம்,
தாளிக்க எண்ணெய்.
எழுதக் காகிதம்
எரிக்க விறகு.

மரம்தான் மரம்தான்
எல்லாம் மரம்தான்.
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான்.

பிறந்தோம், தொட்டில்
மரத்தின் உபையம்.
நடந்தோம், நடைவண்டி
மரத்தின் உபையம்.
எழுதினோம், பென்சில் பலகை
மரத்தின் உபையம்.

மணந்தோம், மாலை சந்தானம்
மரத்தின் உபையம்.
கலந்தோம், கட்டில் என்பது
மரத்தின் உபையம்.
புயின்றோம், தலையணை பஞ்சு
மரத்தின் உபையம்.
நடந்தோம், பாதகை ரப்பர்
மரத்தின் உபையம்.
இறந்தோம், சவப்பெட்டி பாடை
மரத்தின் உபையம்.
எரிந்தோம், சுடலை விறகு
மரத்தின் உபையம்.

மரம்தான் மரம்தான்
எல்லாம் மரம்தான்.
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான்.......

மனிதா
மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா,
ஒவ்வொரு மரமும் போதிமரம் .........

                                                                                - கவிப்பேரரசு வைரமுத்து


https://www.youtube.com/watch?v=9HUDOietxXU

 






Comments

Popular posts from this blog

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing