அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

"சினிமா பாடல்களின் இனிமையும், தத்துவமும் கண்ணதாசன் காலத்துலயே முடிஞ்சு போச்சுப்பா", என்பவர்களுக்கும். "இன்னிக்குலாம் பாட்டா எழுதறாங்க எல்லாம் காதல் பத்தியும், போதைல படராமரியும்தான் எழுதறாங்க" என்று புலம்புபவர்களுக்கும். இப்படியும் பாடல்கள் உண்டு என்பதை உணர்த்திட கடைமை பட்டிருக்கிறேன். முதல் பாடல் அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்திட 'அழகே அழகே ' எனும் இந்த பாடல் வரிகளில் ஊடுருவி, அதன் கருத்தை பரிமாறவும், இந்த பாடலுக்கு ஏன் தேசிய விருது என்பதை எம் பறவையில் வழங்குகிறேன். பிதற்றல் எனத் தோன்றின் பிழை திருத்தவும்.

அழகே அழகாய் அழகிய பாடல்
நா.முத்துக்குமார் எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது இரண்டு பாடல்கள். அவற்றுள் ஒன்று விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" என்ற பாடல்.
பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன்  குரலில் இந்தப் பாடல், அந்த ஆண்டின் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை நா.முத்துக்குமார் அவர்களுக்கு பெற்றுத்தந்தது. இதற்கு கரணம் அந்தப்பாடல் அமைக்கப்பெற்ற விதம்,பாடலின் இனிமை தாண்டி தனித்து நிற்கும் அதன் வரிகளும்,அதில் உள்ள கருத்துக்களும் தான்.
மறைந்த பின்னரும் பாடலாசிரியர்கள் அவர்களின் படைப்புகளில் வாழ்கிறார்கள் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.இந்த பாடல் அமைக்கப்பெற்ற விதம், ஒரு குழந்தையான பேபி சாரா அந்த குடும்பத்திற்கே பாடம் புகட்டும் வகையில் இதன் காட்சியை அமைத்திருப்பார் இயக்குநர். இப்பாடலின் துவக்க வரியே

"அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே"

என்பதாகும்,  முதற் வரியில் அழகு என்று கூறிவிட்டு, தொடர்ந்து இரண்டாம் வரியில் அன்பு கொண்ட கண்களில் எல்லாம் அழகு எனும் கருத்தை பலர்குற, இவர் பாணியில் உணர்த்துகிறார் பாடலாசிரியர். பின் தொடரும் சரணங்களில் எவையெல்லாம் அழகு என்பதற்கு உதாரணம் சொல்லிக்கொண்டே வருகிறார், எடுத்துக்காட்டாக 

"மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகே"

 என்பதுபோன்ற வரிகளால் நம் காணத்தவறிய கண்கள் வாயிலாக இவ்வுலகை  கண்டுருக்கிறார் இவர்.
 
"இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால்
இந்த வழக்கை முழுதும் அழகு"

என்று இன்றைய இயற்கையோடு ஒத்துவாழாத மனிதனின் மண்டையில் கொட்டி, இயற்கையின் அவசியம் குறித்தும் பேசி இருக்கிறார் நுட்பமாக. இது, இதற்கு முந்தைய வரியில் வரும் "சுடும் வெயில் கூட ஒரு அழகே" என்ற வரிகளை வைத்து மீம் போட்டுக் கொண்டிருக்கும் நேட்டீசர்களுக்கு புலப்படாமல் போனது ஏனோ தெரியவில்லை. இயற்கை, மனிதன் சேர்ந்து சமமாய்  வாழ்ந்தால் வெயிலும் ஒரு அழகே அளவே .



கண்ணதாசன் ஒரு காலத்தில் தத்துவம் பேசினார், அதே பாணியில் இப்போதும் பேசினால் இத்தலைமுறை ஏற்க்கது என்று உணர்ந்த கவிஞர் தத்துவப் பாடல் என்று தனியாய் இல்லாமல் இப்படியான பாடல்கள் நடுவில் தத்துவம் பேசுகிறார்.

இப்பாடலின் உச்ச உணர்வு இறுதி காட்சியில் உள்ளது. பாடல் வரிகள் நின்றுவிட... பாடல் அமைப்பின் இறுதி காட்சியில் குடும்பத்தோடு கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு, தனக்குத் திருமணமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத கதாப்பாத்திரத்தில் இருவர் அக்குடும்பத்தில் இருக்க, அந்தப் பெண்ணின் கல்லூரித் தோழி சந்திக்கிறாள், அதை சற்று தூரத்திலிருந்து பேபி சாரா கவனித்துகே கொண்டிருக்கிறாள்.  அந்த தோழி  இயல்பாக பேசுகையில், இவர்களிடம் "உங்க கொழந்த எங்க ?" என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் தவித்த அவர்களை பார்த்த பேபி சாரா "அம்மா, வாங்கம்மா போலாம்" என்று அழைக்க, அந்த தோழியும் "இதன் உங்க பொண்ணா, ரொம்ப அழகா இருக்கா" என்று கூறுகிறாள்
பாடல் மீண்டும் ஒலிக்கிறது,

"உண்மைக்குச் சொல்லிடும்
பொய்களும் அழகு ..." என்று ..

திருக்குறள் கூறிடும் கருத்தை கட்சியாக அமைத்து, எடுத்துரைத்த விதம் அலாதியானதொரு உணர்வு.

இப்படியாக காட்சி, வரிகள், இசை என அனைத்தையும் அற்புதமாக அமைக்கப் பெற்றதினாலே இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள்ளது . இனி வரும் காலங்களில் நா.முத்துக்குமாரின் வரிகள் இப்படி கேட்க முடியாது என்னும் வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், தன வாழ்ந்த குறுகிய காலத்தில் இப்படி முத்தான பாடல்களை தந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் வரிகளில் இன்னமும் ஜீவன் குறையவில்லை, இன்னுமும் பல பாடல்கள் உணர்ந்து அறியப்பட வேண்டி உள்ளது. அதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த ஒரு பாடல்.

-
கெளதம்
ஆறுமுகம்  

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

Dear Team Koo - An open letter on what the App is missing