அழகே அழகே பாடல்.

நா. முத்துக்குமார்  எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இரண்டு திரை இசைப் பாடல்களுள் ஒன்று, விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" பாடல்.



 அந்த பாடல் எது அழகு என்பதை குடிப்பதாய் அமைந்திருக்கும்-

ச ச ச ரிச ரிச ப
ம ம க த த ச ரி ப ப
ச ச ச ச  ரிச ரிச ப

ம ம க த த ச ரி ப ப
கமதனிச ரிரிச 


என உத்ரா உன்னிகிருஷ்ணனின் அழகியா குரலில் துவங்கி

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
கமதனிச ரிரிச
கமதனிச கரிச


ஆகிய வரிகளில் அன்பாய் பார்த்தால் எல்லாம் அழகு என்றும், மழையை பற்றி பலர் பாடி இருக்க அந்த மழை மட்டும் அழகில்லை சுடும் வெயிலும் அழகுதான் என எழுதி இருக்கிறார். இவ்விடத்தில் அவர் "வெயில்" திரைப்படத்திற்காக எழுதிய வெயிலோடு விளையாடி பாடலை நினைவூட்டுகிறேன். மலர் மட்டும் அல்ல காய்ந்து உதிரும் மர இலைகள் கூட அழகுதான். புன்னகை பேசும் பார்வையும், திருவள்ளுவன் சொல்வதுபோல நன்மைக்கு பேசிடும் பொய் கூட அழகுதான்,உண்மையில் அதுதான் அழகு என்பதாக முதல் பத்தியை முடிக்கிறார்.


இப்படி எதுவெல்லாம் மிக எளிதாக நம்மை கடந்து செல்கிறதோ, எதுவெல்லம் தினசரி நம் கண்டும் காணாமல் இருக்கிறோமோ அவரை எல்லாம் அழகு என்று தன பாடல் வரிகளால் கூறி இருக்கிறார் நா. முத்துக்குமார். ரசனை அதிகம் உள்ள ஒரு மனிதர் மட்டுமே இப்படி யோசிக்க முடியும். நீங்களும் ரசியுங்கள் வழக்கை அன்பாக, அழகாக இருக்கும். இந்த பாடலின் இன்ன பிற வரிகளை கவனித்து உணர்ந்துகொள்ளும் பொருட்டை உங்களிடம் விட்டுவிடுகிறேன். 

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing