சொட்ட சொட்ட ரத்தம் ..!!

    ஒரு நாள் இரவு, நானும் என் அம்மாவும் விருந்தினரோடு பேசிக்கொண்டு இருந்தோம். எங்கள் வீட்டுக்கு இரண்டு வாசல் .. நான் முன் வாசலை பார்த்தபடி அமர்ந்திருக்க, வந்திருந்த விருந்தாளி பின் வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில் அந்த உறவினர் முகத்தில் திடீர் அச்சம்..!!

   எந்த வித சத்தமும் இல்லாது உள்ளே நுழைய முற்பட்ட அந்த நபரை பார்த்து அதிர்ச்சியுற்றார் எங்கள் விருந்தினர். அந்த நபர் இந்த வீட்டுக்கு புதியவர் இல்லை, வந்திருந்த விருந்தாளிக்கு புதியவர். திருட்டு எண்ணத்தோடு வந்தவரை பார்த்து அலறிவிட்டார்  விருந்தாளி. பதட்டத்தை புரிந்துகொண்ட நான் புறவாசல் கதவை அடைத்து வேகமாக ஓடி ஏன் தந்தையை அழைத்து வர. இருவரும் கையில் பொருளோடு சண்டைக்கு தயார் ஆனோம். தப்பிக்கும் வழிகள் அடைக்கப்பட்டன. அந்த முற்றத்தில் நான், ஏன் தந்தை, அந்த நபர் மட்டுமே.

   காத்திருந்தோம் வெளியே வர இருந்த ஒரே வழியில் காத்திருந்தோம்.
அந்த நபர் சற்று எட்டி பார்த்து யாரும் இல்லை என்பதை அருந்து வெளியே வர, நடுமண்டையில் படேல் என்று விழுந்தது முதல் அடி. இந்த முறை ரத்தம் இல்லை.. சிறிது காயங்களோடு மீண்டும் உள்ள ஓடிவிட தீவிரம் ஆனது சண்டை. உள்ளேய இருந்த பொருட்கள் அனைத்தும் உருட்டிவிட படித்தது. ஒளிந்துகொள்ள வழியே இல்லாமல் செய்து தேடுதல் பணி நடந்து கொண்டிருந்தது.  தகரம் ஊருல , பிளாஸ்டிக் உடைய சத்தம் தீவிரம் ஆனது....


இது அனைத்தையும் வெளியில் இருந்து பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நன். இறுதியாக அடி பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த நபரின் வாலை பிடித்து வெளியே தூக்கிக்கொண்டு வந்தார் அந்த நான்குகால், இரண்டு பெரிய பல், மீசை மூக்குடன் முகர்ந்து முகர்ந்து சந்து பொந்தில் பூந்து ஓடும் நீண்ட வாலுடன் தந்திரமாக வீட்டிற்குள் நுழையும் அந்த கண்டதை கொறிக்கும் திருட்டு நபரை ...



  பிறகு என்ன அவரை வெளியே கொண்டு சென்று போடவேண்டிய இடத்தில் போட்டுவிட்டு அவர் வந்திருக்க கூடிய எல்ல வழிகைகைளயும் அடைத்து விட்டு வெற்றி கொண்டதை விருந்தினரிடம் அறிவித்தோம்.....

                                                                  *** முற்றம்***

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

My Experience working with a Global Team