நா. முத்துக்குமார்

இந்த பதிவு பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பற்றி நான் படித்த அவரது "பட்டாம்பூச்சி விற்பவன்" புத்தகத்தில் இருந்தது 



நா. முத்துக்குமார் பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும்,சென்னை பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக  
முனைவர் பட்டமும் பெற்றவர்.

தூசிகள், பட்டாடம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்,கிராமம் நகரம் மாநகரம்,கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம்,அ'னா ஆ',வன்னா, 
என்னைச் சந்திக்க கனவில் வராதே,அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன், ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.இவரது கவிதைகள் ஆங்கிலம்,இந்தி,மலையாளம்,தெலுங்கு,பிரெஞ்சு,ஜெர்மன், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி உட்பட பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடாத்தக்கது. 

நான் படித்த இந்த "பட்டாம்பூச்சி விற்பவன்" புத்தகத்திற்காக  1997ம் ஆண்டின் ஸ்டேட் பாங்க்  விருது பெற்றுள்ளளார். திரை இசை பாடல்களுக்கான  விருதுகளை "ஆனந்த் யாழை"(தங்கமீன்கள்), "அழகே அழகே"(சைவம்) ஆகிய  பாடல்கள் எழுதியதற்காக இரண்டுமுறை பெற்றுள்ளார்.  

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing