"சினிமா பாடல்களின் இனிமையும், தத்துவமும் கண்ணதாசன் காலத்துலயே முடிஞ்சு போச்சுப்பா", என்பவர்களுக்கும். "இன்னிக்குலாம் பாட்டா எழுதறாங்க எல்லாம் காதல் பத்தியும், போதைல படராமரியும்தான் எழுதறாங்க" என்று புலம்புபவர்களுக்கும். இப்படியும் பாடல்கள் உண்டு என்பதை உணர்த்திட கடைமை பட்டிருக்கிறேன். முதல் பாடல் அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்திட 'அழகே அழகே ' எனும் இந்த பாடல் வரிகளில் ஊடுருவி, அதன் கருத்தை பரிமாறவும், இந்த பாடலுக்கு ஏன் தேசிய விருது என்பதை எம் பறவையில் வழங்குகிறேன். பிதற்றல் எனத் தோன்றின் பிழை திருத்தவும். அழகே அழகாய் அழகிய பாடல் நா.முத்துக்குமார் எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது இரண்டு பாடல்கள். அவற்றுள் ஒன்று விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" என்ற பாடல். பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் இந்தப் பாடல், அந்த ஆண்டின் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை நா.முத்துக்குமார் அவர்களுக்கு பெற்றுத்தந்தது. இதற்கு கரணம் அந்தப்பாடல் அமைக்...
Comments
Post a Comment