NUIT ET BROUILLARD


               இது ஒரு சிறந்த ஆவணப்படம், இந்த திரைப்படத்தின் மொத்த நேரம் 32 mins. இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறு மிக முக்கியமானது. கொடுங்கோல் ஆட்சிக்கு பெயர் போன ஹிட்லர் அப்படி பெயரிட பட்டதற்கான காரணங்களுள் ஒன்று  "HOLOCAUST".



                 IMDbல் இத் திரை படத்தின் கதை குறித்து கூறப்பட்டிருப்பது

"One of the most vivid depictions of the horrors of Nazi Concentration Camps. Filmed in 1955 at several concentration camps in Poland, the film combines new color and black and white footage with black and white newsreels, footage shot by the victorious allies, and stills, to tell the story not only of the camps, but to portray the horror of man's brutal inhumanity."

"நாசி சித்தரவதை கூடங்களில் நடந்த கொடுமைகளை மிக உணர்வுப்பூவரதமாக சித்தரித்திருக்கும் படம். 1955 ஆம் ஆண்டு போலந்தில் இருந்த சில சித்தரவதை கூடங்களில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்த ஆவணப்படத்தின் சிறப்பேய் கருப்பு வெள்ளை உண்மை காட்சிகளும், நிகழ்கால காட்சிகளையும் ஒருங்கே அமைத்து , அன்றைய அவரகள் கூட்டாளிகளால் எடுக்கப்பட்ட காட்சிகளும், புகைப்படங்களும் இடையில் காண்பிக்கப்படும். இது அந்த கூடங்களின் கொடுமை மட்டுமின்றி, ஒரு தனி மனிதனின் மனிதத்தன்மையற்ற கூடூரத்தையும் சித்தரித்துஇருக்கும்"



இத்தகைய படம் நம் பார்க்கவேண்டிய ஒரு படம். இதை பற்றி கேட்டிராதவர்கள் அதை பற்றி படிப்பது அவசியம். இதே போன்ற கொடுமை  நமக்கு மிக அருகாமையில், மிக சில ஆண்டுகளுக்கு நடந்ததையும்  நன் இங்கேய நினைவுட்டுட்ட விரும்புகிறேன்.இதன் தாக்கமே அப்டி ஒரு சம்பவம் நிகழ காரணமாக இருக்கும் என்பது எனக்கு தோன்றிய உண்மை. இந்த படத்தை பற்றி மேலும் நன் குறிப்பிட விரும்பவில்லை.


பி.கு.  வசனம் படத்தில் முக்கியமானது , subtitle உதவியுடன் பார்ப்பது அவசியம்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing